எல்லை தாண்டிய தமிழக மீனவர்கள் 17 பேர் கைது!

 ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 17 பேரை  இலங்கை கடற்படை நேற்று 


கைது செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

tamil lk news


நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 17 பேரை அங்கு வந்த இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.




மீனவர்களையும் காங்கேசன் துறை கடற்படை முகாமில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.




தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்படுவது மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.




Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்