ஜனாதிபதி அநுரவிற்கு நன்றி தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா

tamil lk news


 கடற்றொழில் அமைச்சராக செயற்பட்டபோது தன்னால் முன்மொழியப்பட்டு அமைச்சரவையில் அனுமதிக்கப்பட்ட  திட்டத்தினை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அனுமதி அளித்துள்ளமைக்கு நன்றி தெரிவித்துள்ள முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதிக்கு தன்னுடைய வாழ்த்துக்களையும்  தெரிவித்துள்ளார்.


கடற்றொழிலாளர்களினால் பயன்படுத்தப்படுகின்ற எரிபொருளுக்கு, லீற்றர் ஒன்றிற்கு  தலா 25  ரூபாய் மானியம்  வழங்குவதற்கான டக்ளஸ் தேவானந்தாவின் யோசனைக்கு கடந்த அமைச்சரவை அனுமதி  வழங்கியிருந்த போதும் தேர்தல் சட்ட ஏற்பாடுகளுக்கு மைய குறித்த தீர்மானம் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், அதனை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்