கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி - பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்!

 இந்தியா, கேரளாவில் இரண்டாவது நபருக்கும் குரங்கம்மை தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.


கடந்த செப்டெம்பர் 18ஆம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளா திரும்பியவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டது.

tamil lk news


இதனையடுத்து மேலும் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்து துறை தெரிவித்துள்ளது.


26 வயதான குறித்த இளைஞனின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.




குரங்கம்மை பாதிப்பை தடுப்பதற்கு தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்