தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து மன்னாரில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டம்

tamil lk news


 ஜனாதிபதி தேர்தலின் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் நாளைய தினம் (13) மாலை 3 மணிக்கு மன்னார் நகர பேருந்து நிலையத்தில் இடம்பெற உள்ளது.


நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் ஏற்பாட்டில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மோகன்ராஜ் ஒருங்கிணைப்பில் குறித்த பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.



குறித்த பொதுக் கூட்டத்தில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் சார்பில் அரசியல் கட்சித் தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதி நிதிகள் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.



இந்த பொதுக் கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு தமிழ் தேசிய பொது கட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்