வவுனியாவில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு!

 வவுனியா (Vavuniya) - ஓமந்தை பகுதியில் இன்று(18) மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.


ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த இருவர் ஓமந்தை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அண்மையில் சென்றுகொண்டிருந்த போது வீதியில் நின்ற  ஒருவருடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

tamil lk news


விபத்தில் பலத்த காயமடைந்த இருவரும் வீதியால் சென்றவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 


எனினும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.




குறித்த விபத்தில் ஓமந்தை பன்றிகெய்தகுளம் பகுதியை சேர்ந்த சங்கீதன் வயது 40 மற்றும் கிளிநொச்சி பகுதியை சேர்ந்த யோகராசா 42 ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.




இச் சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்