இளம் பெண் ஒருவர் கொடூரமாக வெட்டி படுகொலை....!

 

tamil lk news

மிரிஹான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெங்கிரிவத்த, சந்தானம்பிட்டிய பிரதேசத்தில் பெண் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


குறித்த பெண் தனது வீட்டில் தங்கியிருந்த நிலையில் கத்தியால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


சந்தானம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.




அந்த வீட்டின் சாரதியாக பணியாற்றியவரே கொலையை செய்துள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.


சந்தேக நபரை கைது செய்வதற்காக மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.






புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்