ரணிலின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பரபரப்பு ! துப்பாக்கி ரவையுடன் இளைஞர் கைது !

 மட்டக்களப்பு கிரான் கோரகல்லிமடுவில் இன்று (8) ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வருகை தரவிருந்த வேளை இளைஞர் ஒருவரை துப்பாக்கி ரவையுடன் கைதுசெய்துள்ளதாக சந்திவெளி பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

tamil lk news


வாகரை அம்பந்தனாவெளியைச் சேர்ந்த இன்பராசா என்ற 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


கிரான் கோரகல்லிமடு விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து இராஜங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனினால் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இந்நிகழ்வில் பங்குபற்றுவதற்காக பொதுமக்கள் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் வாகனங்களில் கட்சி ஆதரவாளர்களால் அழைத்து வரப்பட்டிருந்தனர்.


குறித்த இளைஞனும் இது போன்று வாகரை பிரதேசத்திலிருந்து அழைத்து வரப்பட்டிருந்தார்.


இவ்வாறான நிலையில் ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டம் எதுவித குழப்பமின்றி சற்று தாமதித்து நடைபெற்றது.


கைதுசெய்யப்பட்டவர் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


Srilanka Tamil News



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்