வவுனியாவில் (Vavuniya)14 வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு 6 மாதத்திற்கு பின்னரான நிலையில், பிரமுகர் ஒருவருக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த குறித்த சிறுமியை கடந்த பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி நலன்புரி அமைப்பொன்றின் பிரமுகரான இளைஞர் ஒருவர் துஸ்பிரயோகம் செய்ததாக பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாய்க்கு தெரிய வந்த நிலையில், இது குறித்து வெளியில் தெரியப்படுத்தக் கூடாது என குறித்த பிரமுகர் மிரட்டியதாகவும், சம்பவம் இடம்பெற்று6 மாதத்தின் பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார், மாவட்ட செயலக சிறுவர் பிரிவு மற்றும் வவுனியா பொலிஸ் நிலையம் என்பவற்றில் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பாக வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய வவுனியா தோணிக்கல் பகுதியில் வசித்து வந்த, சந்தேகநபர் கடந்த சில மாதங்களாக முகப்புத்தகத்தில் தமிழ் ஆயுத போராட்ட அமைப்பு தொடர்பில் பதிவேற்றியமைக்காக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Vavuniya Tamil News