யாழ்ப்பாணத்தில்15 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேருக்கு நேர்ந்த நிலை!

 

tamil lk news

யாழ்ப்பாணத்தில் (Jaffna) தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக 15 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.


இதன்படி, சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/157 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேரும்,


கோப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/278 கிராம சேவகர் பிரிவில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேரும்,


பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/410 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேரும்,




ஜே/417 கிராம சேவகர் பிரிவில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேரும்,


ஜே/393 கிராம சேவகர் பிரிவில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேரும்,


ஜே/413 கிராம சேவகர் பிரிவில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்