வேகக்கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் நுழைந்த மோட்டார் சைக்கிள்!

 

tamil lk news

பரந்தன் பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் நுழைந்த சம்பவம் ஒன்று இன்றைய தினம் மாலை இடம்பெற்றுள்ளது.


பரந்தன் பகுதியில் இருந்து வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உள்ள நகை கடையொன்றிற்குள் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு புகுந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.




குறித்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகிறார்கள்.




புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்