2025 பெப்ரவரியில் கொண்டு வரப்படும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது குறித்து அவதானம் செலுத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேசிய மக்கள் சக்தியின் முதலாவது மக்கள் பேரணி இன்று (19) தங்காலையில் இடம்பெற்ற போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.



