விசேட எரிபொருள் சலுகையை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

 மீனவ சமூகங்களுக்கு ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் விசேட எரிபொருள் சலுகையை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

tamil lk news


2024.10.01 ஆம் திகதி முதல் அடுத்த 06 மாத காலத்துக்கு இந்த நிவாரணம் வழங்கப்படும்.




நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக மீன்பிடித் தொழிலில் ஏற்பட்டுள்ள பாதிப்பைக் குறைத்து மீன்பிடித் தொழிலை மீட்டெடுப்பது தொடர்பில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.




புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்