தேர்தலுக்காக சுவரொட்டிகளை விளம்பரப்படுத்திய குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்!

 நாடாளுமன்ற தேர்தலுக்காக சுவரொட்டிகளை விளம்பரப்படுத்திய குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி  உயிரிழந்த சம்பவம்  நேற்றையதினம் இரவு முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.

tamil lk news


சம்பவத்தில் முத்து விநாயகபுரம் பகுதியை சேர்ந்த காசலிங்கம் தங்கதீபன் என்ற 45 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தரே  உயிரிழந்துள்ளார். 


முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான், முத்து விநாயகபுரம் பகுதியில்  தமிழ் தேசிய மக்கள் முன்னணி  கட்சியில் போட்டியிடும்  இரு வேட்பாளர்களின் விளம்பர சுவரொட்டிகளை குறித்த நபர் ஒட்டியபோது மின் ஒழுக்கு காரணமாக மின்சாரம் தாக்கியுள்ளது. 

tamil lk news


இதனையடுத்து, குறித்த குடும்பஸ்தர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.




உயிரிழந்தவரின் உடலம்  தற்போது முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில்  வைக்கப்பட்டுள்ளது. 


சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்