பாராளுமன்ற தேர்தலில் வன்னி தொகுதியில் களமிறங்க கட்டுப்பணம் செலுத்தியது தமிழர் மரபுரிமை கட்சி..!

 எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் சுயாதீனமாக போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை தமிழர் மரபுரிமை கட்சியினர் இன்றைய தினம்(02) வவுனியா (Vavuniya) தேர்தல்கள் ஆனைக்குழுவில் செலுத்தியிருந்தனர் 


அக்கட்சியின் தலைவர் நேசராசா சங்கீதன் தலைமையில் குறித்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டிருந்தது.

tamil lk news


கட்டுப்பணத்தை செலுத்திய பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த அக்கட்சியின் தலைவர், 





தாங்கள் கடந்த உள்ளூராட்சி தேர்தலில் முல்லைத்தீவில் சுயேட்சைக் குழுவாக போட்டியிட்டு பல பிரதேச சபை உறுப்பினர்களை கொண்டுள்ள கட்சி என்றும், நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இளம் சமூதாயத்திற்கு சந்தர்ப்பம் கிடைக்க வேண்டும் என்றும், அதற்கான தளத்தை தாங்கள் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்த அவர், தமது கட்சியானது வடக்கு மற்றும் கிழக்கில் அனைத்து மாவட்டங்களிலும் சுயேட்சையாக போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்தார்.




Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்