நாட்டை சூழவுள்ள கடற்பகுதிகளில் அதிகரிக்கும் காற்றின் வேகம்-வளிமண்டலவியல் திணைக்களம் எச்ச்ரிக்கை!

 நாட்டை சூழவுள்ள கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.


வங்காள விரிகுடா கடல் பகுதியில் மணித்தியாலத்துக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, குறித்த கடற்பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

tamil lk news


இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்று இரவு வேளையில் பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.


மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


இதன்படி, மேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.


இதேவேளை, நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை மூவாயிரத்து 472 குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 858 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.




சீரற்ற காலநிலையால் மன்னார் மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.


இதன்படி, மன்னார் மாவட்டத்தில் ஏழாயிரத்து 223 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்