கால் கிலோ உருளைக்கிழங்கு காணவில்லை என பொலிஸ் அவசர இலக்கத்திற்கு முறைப்பாடு!

 

tamil lk news

சமையலுக்கு எடுத்து வைத்த உருளைக்கிழங்கு திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் அவசர இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடு செய்த நபரொருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.


இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் கோட்வாலி நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது, இது தொடர்பான  வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


மன்னபுர்வா பகுதியைச் சேர்ந்த விஜய் வர்மா என்ற நபர் பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவிற்கு தொடர்பு கொண்டு இந்த திருட்டு குறித்து முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



அதன்படி பொலிசார் வந்து விசாரித்தபோது 250 கிராம் உருளைக்கிழங்கு திருட்டு போனதாக தெரிவித்துள்ளார் சமைப்பதற்காக உருளைக்கிழங்குகளை ஒதுக்கி வைத்ததாகவும், ஆனால் திரும்பி வந்து பார்த்தபோது அவற்றை காணவில்லை என்றும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.


இதுபற்றி யாரேனும் சந்தேகப்படுகிறீர்களா என பொலிசார் அவரிடம் கேட்டபோது, ​​பொலிசார் கண்டுபிடித்து விடுவார்கள் என நம்புவதாக கூறியுள்ளார்.



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்