வவுனியாவில் துப்பாக்கிசூடு!பெண் ஒருவர் படுகாயம்...!

tamil lk news


 வவுனியாவில் (Vavuniya) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பெண் ஒருவர் படுகாயமைடந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


வவுனியா - சுந்தரபுரம் பகுதியில் நேற்றயதினம்(05.11.2024) குறித்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.


சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,


“நேற்றையதினம் குறித்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற அவரது மருமகன் நாட்டுத் துப்பாக்கியால் பெண்ணின் வாய்ப்பகுதியில் சுட்டுள்ளார்.


இதனால் படுகாயமடைந்த பெண் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.


Girl in a jacket டிசம்பர் முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விநியோகம்!


சம்பவத்தில் சுந்தரபுரம் பகுதியை சேர்ந்த 54 வயதான பெண்ணே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.



தாக்குதலை மேற்கொண்ட நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈச்சங்குளம் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.




Previous Post Next Post