கண்டியில் (Kandy) மண்சரிவில் வீடொன்றில் சிக்கி தவித்த குடும்பம் ஒன்றை குழுவை இராணுவத்தினர் காப்பாற்றியுள்ளனர்.
கண்டி, பேராதனை வீதியில் பாரிய மண்சரிவு ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்து வெளியேறும் பகுதிக்கு செல்லும் படிக்கட்டுகளும் முழுமையாக உடைந்துள்ளது.
இதனால் அந்த குடும்பத்திற்கு வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் போயுள்ளது.
வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்த 4 பேரும் இரண்டு சிறுவர்கள் தொடர்பிலும் கிடைத்த தகவலுக்கமைய, இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.
இராணுவத்தை சேர்ந்த 11 அதிகாரிகள் கொண்ட அவசரகால குழுவினர் பெரும் முயற்சியின் பின்னர் 6 பேரையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.