திருகோணமலையில் கோர விபத்து !! கடற்படை வீரர் உயிரிழப்பு

 திருகோணமலை (Trincomalee) -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிச்சேனைப் பகுதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாகவும் ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.


இன்று (16) இரவு  குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

tamil lk news


கடற்படை வாகனமும், கெப் ரக வாகனமும் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.இச்சம்பவத்தில் சம்பூர் கடற்படை முகாமில் கடமை புரியும் 49 வயதுடைய கடற்படை வீரர் உயிரிழந்துள்ளார்.




அத்தோடு மற்றைய வாகனத்தில் பயணித்த மற்றும் ஒருவர் படுகாயம் அடைந்து ஈச்சிலம்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.




உயிரிழந்த அடிப்படை வீரரின் சடலம் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்