வவுனியாவில் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனாவுக்கு மாற்றம்!

  

tamil lk news

வவுனியாவில் (Vavuniya) எலி காய்ச்சல் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு இன்றையதினம்(16) மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


வவுனியா, தாலிக்குளம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், வவுனியா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். 



எனினும் அவருக்கு காய்ச்சல் குணமாகாமையினால் மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

tamil lk news


அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு எலி காய்ச்சல் தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதுடன், அவருக்கு அங்கு மேலதிக சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

Vavuniya News



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்