வவுனியாவில் கோவில்குளம் சந்தி அருகில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு!

tamil lk news


 வவுனியா (Vavuniya) கோவில்குளம் சந்தி அருகில் அமைந்துள்ள கடைத்தொகுதிக்கு முன்பாக முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.


சடலம் இன்று (09) காலை மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


வவுனியா கோவில் புதுக்குளத்தை சேர்ந்த 63 வயதுடைய எம். விஜயரத்தினம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.



இதேவேளை குறித்த சடலத்தினை திடீர் மரண விசாரணை அதிகாரி லா.சுரேந்திரசேகரன் பார்வையிட்டதோடு. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

vavuniya news





Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்