அமெரிக்க வானில் சுற்றி திரியும் பறக்கும் மர்ம பொருட்கள் மக்கள் பதற்றம்!

  

tamil lk news

அமெரிக்காவின் நியூ ஜெர்சி(New Jersey) மாநிலத்தில் ட்ரோன்(Drone) போன்ற பாரியளவிலான பறக்கும் மர்ம பொருட்கள் சுற்றித்திரியும் நிலையில், அப்பகுதி மக்கள் பதற்றமடைந்துள்ளனர்.


இந்த பறக்கும் ட்ரோன்கள் தொடர்பில் அமெரிக்க அரசாங்கம் விளக்கமளிக்காமல் இருப்பதால், இவை தொடர்பிலான விளக்கத்தை அரசாங்கமே இதுவரை கண்டறியவில்லை என சர்வதேச ஊடங்கள் தெரிவித்துள்ளன.


இவ்வாறு பறக்கும் ட்ரோன்களை சுட்டுத் தள்ளுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையிலும், அது சட்டத்திற்கு முரனானது என்பதால் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


 கடந்த இரண்டு வாரங்களாக நியூ ஜெர்சி மாநிலத்தில் தென்படும் இந்த ட்ரோன் வகை பொருட்கள், சிவப்பு மற்றும் பச்சை மின்விளக்குகளுடன் ஒரு 'SUV' காரின் அளவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 வை அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்பிற்கு சொந்தமான கோல் கோல்ஃப்(Golf) மைதானத்தின் மேலும் வட்டமிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இவை தொடர்பில் இதுவரை விளக்கமளிக்கப்படாத நிலையில், அப்பகுதி மக்கள் இது ஈரானிய விமானப் படையின் நடவடிக்கையாக இருக்கலாம் என தெரிவித்து வருகின்றனர். மேலும், சிலர் இது வேற்றுக்கிரக வாசிகளின் நடமாட்டத்தை சுட்டிக்காட்டுவது போல இருப்பதாகவும் கூறுகின்றனர்.






புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்