சிறுமிக்கு ஆபாச காணொளிகளை அனுப்பிய சிப்பாய் கைது!

  சிறுமியை அச்சுறுத்தி தனது கையடக்கத் தொலைபேசியில் இருந்து ஆபாசமான குறுஞ்செய்திகள் மற்றும் காணொளிகளை அனுப்பிய இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டதாக சிறிபுர பொலிஸார் தெரிவித்தனர்.


இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அவர் கைது செய்யப்பட்டதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

tamil lk news


தந்திரிமலை இராணுவ முகாமிற்குட்பட்ட பதவி பராக்கிரமபுர பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


பதின்மூன்று வயதுடைய பாடசாலை மாணவியே இச்சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளார். 



பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். 



சிறிபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Previous Post Next Post