வவுனியாவில் தொலைபேசி கம்பத்துடன் மோதுண்ட வான்

  

tamil lk news

வவுனியா (Vavuniya) பண்டாரிக்குளம் பகுதியில் தொலைபேசி இணைப்பு கம்பத்துடன் மோதுண்டு வான் விபத்துக்குள்ளானது.


பண்டாரிக்குளம் பகுதியிலிருந்து புகையிரத நிலைய வீதி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வான் பண்டாரிக்குளம் அம்மன் கோவிலை அண்மித்த பகுதியில் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியின் அருகேயிருந்த தொலைபேசி இணைப்பு கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.


இவ் விபத்தில் வாகனம் மற்றும் தொலைபேசி இணைப்பு கம்பம் என்பன பகுதியளவில் சேதமடைந்து.




வாகனத்தில் பயணித்தவர்களுக்கு எவ்வித உயிராபத்துகளும் நிகழவில்லை.



Previous Post Next Post