வவுனியாவில் தேக்கு மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற வாகனத்துடன் ஒருவரை பொலிஸார் கைது!

 

tamil lk news

 வவுனியா (Vavuniya)  நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று அனுமதிப்பத்திரமின்றி 73 தேக்கு மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற வாகனத்துடன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.எம்.பி.ஆர்.கே திவுல்வெவ தலைமையிலான பொலிஸ் குழுவினர் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது,



மரக்காரம்பளை பகுதியில் குறித்த பட்டா ரக வாகனத்தினை மறித்து சோதனைக்குட்படுத்திய சமயத்தில் 73 தேக்கு மரக்குற்றிகளை அனுமதிப்பத்திரம் இன்றி ஏற்றிச்சென்ற குற்றச்சாட்டில் பட்டா ரக வாகனத்தினை பொலிஸார் கைப்பற்றியமையுடன்  சாரதியினையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.



மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த பட்டா ரக வாகனம் மற்றும் 73 தேக்கு மரக்குற்றிகள் என்பவற்றுடன் கைது செய்யப்பட்ட வாகனத்தின் சாரதியையும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆயர்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்