ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது! Srilanka News Tamil

.

 Srilanka News Tamil

 கொழும்பிலிருந்து (Colombo) பொகவந்தலாவ நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் நேற்று (09) இரண்டு மில்லிகிராம் ஐஸ் என்ற போதைப்பொருளுடன் பொகவந்தலாவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது! Srilanka News Tamil-One arrested with ice drugs! Srilanka News Tamil


கொழும்பிலிருந்து பொகவந்தலாவை நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில் ஒருவர் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்ததாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பொகவந்தலாவ பொலிஸ் அதிகாரிகள், குறித்த பேரூந்து பொகவந்தலாவ நகருக்கு வந்ததன் பின் அவரை சோதனையிட்டுள்ளனர். அப்போது ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் இருப்பதை கண்டறிந்தனர்.


பொகவந்தலாவ பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் வசிக்கும் 38 வயதுடைய சந்தேக நபர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும், சந்தேக நபர் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்