காட்டு யானைகளால் ஏற்படும் சேதங்களை குறைக்க திட்டம்! Srilanka News Tamil

 Srilanka News Tamil

காட்டு யானைகளால் ஏற்படும் சேதங்களை குறைக்க திட்டம்! Srilanka News Tamil-Plan to reduce damage caused by wild elephants! Srilanka News Tamil


 காட்டு யானைகளால் பயிர்ச்செய்கையில் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கான ஒரு முன்னோடித் திட்டமாக மகாவலி E வலயத்தின் ஹெட்டிபொல மற்றும் வில்கமுவ பகுதிகளில் கருவப்பட்டைச் செய்கையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


மகாவலி E வலயத்தின் மறுமலர்ச்சி வாரத்துடன் இணைந்து, வில்கமுவ மற்றும் ஹெட்டிபொல பகுதிகளில் வசிக்கும் நூறு விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒவ்வொரு விவசாயிக்கும் கால் ஏக்கர் நிலத்திற்கு 900 கருவப்பட்டை செடிகள் வழங்கப்பட உள்ளன.


இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் கருவப்பட்டை செடிகள் பயிரிடப்படவுள்ளன.  இலங்கை கருவப்பட்டைக்கு உலகலாவிய ரீதியில் அதிக கேள்வி இருப்பதால், மகாவலி E வலயத்தில் இந்தப் பயிர்ச்செய்கையை விரிவுபடுத்துவதனூடாக, அந்தப் பகுதிகளில் உள்ள விவசாயிகளின் பொருளாதாரமும் பலப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



மேலும், காட்டு யானைகள் கருவப்பட்டை செய்கையை சேதப்படுத்தாது என்பதால், அந்தப் பகுதிகளில் மனித-யானை மோதலைக் குறைக்க முடியும்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்