காதலர் தினத்தைக் கொண்டாட மறுத்த காதலி - இளைஞன் எடுத்த விபரீத முடிவு!

Srilanka News News

  காதலர் தினத்தைக் கொண்டாட யாழ்ப்பாணம் செல்ல தனது காதலி விரும்பாததால் மனமுடைந்த கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று கிணற்றில் குதித்து உயிரைமாய்த்துக் கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.


கிளிநொச்சி தர்மபுரம் அம்பலபொக்கணை பகுதியைச் சேர்ந்த   29 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காதலர் தினத்தைக் கொண்டாட மறுத்த காதலி - இளைஞன் எடுத்த விபரீத முடிவு - Girlfriend refuses to celebrate Valentine's Day - A young man's bizarre decision!


இந்த வருடம் காதலர் தினத்தைக் கொண்டாடுவதற்காக யாழ்ப்பாணம் சென்றுவர அவர் தனது காதலியை பலமுறை கேட்டிருந்தார், ஆனால் அந்தப் பெண் அதற்கு சம்மதிக்கவில்லை.


அந்த இளைஞன் பலமுறை வற்புறுத்தியதால், அந்த பெண் இளைஞன் மீது கோபமடைந்துள்ளார்.


இதனால் அந்த இளைஞன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.


சம்பவம் நடந்த நாளில், அந்த இளைஞன் தனது காதலிக்கு பலமுறை தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டதாகவும், ஆனால் அவர் பதிலளிக்காமல் தொலைபேசி இணைப்பை துண்டித்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


News Thumbnail
நாடளாவிய ரீதியில் இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு!


இதனால் மனஉளைச்சலுக்குள்ளான இளைஞர், கிணற்றில் குதித்து உயிரைமாய்த்துக் கொண்டுள்ளார்.



கிணற்றிலிருந்து இளைஞனின் உடலை தர்மபுரம் பொலிஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்