சிறுமி மீது பாலியல் வன்கொடுமை ; மைத்துனர் கைது..!

 Srilanka Tamil News

சிறுமி மீது பாலியல் வன்கொடுமை ; மைத்துனர் கைது - Sexual assault on minor girl; brother-in-law arrested


 வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரசேகர கிராம பகுதியில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 29 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் .


ஜனவரி 23 ஆம் திகதி முதல் பிப்ரவரி 20 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் , குறித்த சிறுமி பாடசாலைக்கு சென்று வந்து வீட்டில் இருந்தபோதெல்லாம் அவரின் மைத்துனரான சந்தேக நபர் வீட்டுக்கு வந்து  பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 இது தொடர்பாக குறித்த சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்ததையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.



இச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டு, வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.



 சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்