கனடா துப்பாக்கிச் சூட்டில் இலங்கை யுவதி பலி!

  world news Tamil

கனடாவின் மார்க்காம், ஒன்ராறியோவில் அமைந்துள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 20 வயதுடைய யுவதி ஒருவரும், அவரது வளர்ப்பு நாயும் உயிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


சம்பவத்தில் உயிரிழந்தவர் மார்க்காமைச் சேர்ந்த 20 வயதுடைய நிலாக்ஷி ரகுதாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


கடந்த வாரம் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு ஆணும் படுகாயமடைந்துள்ளார்.

கனடா துப்பாக்கிச் சூட்டில் இலங்கை யுவதி பலி!Sri Lankan woman killed in Canada shooting!


இந்த வீட்டில் கடந்த காலங்களில் பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக யார்க் பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளது.


அந் நாட்டு நேரப்படி வெள்ளிக்கிழமை (07) காலை 6:30 மணியளவில் நெடுஞ்சாலை 48 மற்றும் காசில்மோர் அவென்யூ அருகே சோலஸ் சாலையில் அமைந்துள்ள வீட்டில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக யார்க் பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளது.


இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


மற்றொரு பாதிக்கப்பட்ட நபர் 26 வயதுடைய ஆண் ஆவார். பலத்த காயமடைந்துள்ள அவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்ச‍ை பெற்று வருகின்றார்.



இந்த தாக்குதலின் போது ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் நாயும் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.


கடந்த 2024 பெப்ரவரியில் குறித்த வீட்டில் ஒரு முறையும், அடுத்த மாதத்தில் இரண்டு முறையும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக யார்க் பிராந்திய காவல்துறை குறிப்பிட்டுள்ளது.



துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நால்வர் கெப் ரக வாகனத்தில் தப்பிச் செல்வது சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். 



இந்த சம்பவங்களில் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்