வாகனம் வாங்க காத்திருப்போருக்கு விரைவில் அரசாங்கம் வெளியிடவுள்ள மகிழ்ச்சி தகவல்

 Srilanka News Tamil

வாகனம் வாங்க காத்திருப்போருக்கு விரைவில் அரசாங்கம் வெளியிடவுள்ள மகிழ்ச்சி தகவல்


 வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் தளர்த்தப்படும் என்று கைத்தொழில் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.


கொழும்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பிரதி அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


அத்தோடு, அந்நியச் செலாவணி இருப்புகளைப் புரிந்துகொண்டு தற்போது வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



 இந்த நிலையில், அதிகபட்சமாக ஒரு பில்லியன் டொலர்களுக்கு உட்பட்டு வாகனங்களை இறக்குமதி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.



 அத்தோடு, அரசாங்கத்திற்கு அதிக வரி வருவாயை ஈட்டித் தருவதற்காகவும், சில கட்டுப்பாட்டை உருவாக்குவதற்காகவும் தற்போது வாகனங்கள் மீதான வரிகள் விதிக்கப்படுகின்றன என்றும் சதுரங்க அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்