புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இலங்கை மின்சார சபை

  2025 ஜூன் மாதமளவில் இலங்கை மின்சார சபையானது அதன் மின்சார உற்பத்தியில் 70 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியிலிருந்து பூர்த்தி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. 


1990ஆம் ஆண்டின் முற்பகுதிக்குப் பிறகு முதல் முறையாக, இலங்கை மின்சார சபையானது இந்த மாத நிலவரப்படி அதன் மொத்த மின்சார உற்பத்தியில் 70 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்து பெற்றுள்ளது. 

Tamil lk News


ஏனைய மாதங்களை விட இந்த மாதம் தேவை அதிகமாக இருந்த சூழ்நிலையில் இவ்வாறு நிறைவு செய்யப்பட்டாக குறிப்பிடப்பட்டுள்ளது. 



நாட்டின் மின்சார விநியோகம் சுமார் 100 சதவீதம் நீர் மின்சாரம் சார்ந்தது என்ற ஆரம்பகாலக் கொள்கையிலிருந்தும், காலப்போக்கில் பின்பற்றப்பட்ட கலப்பின நீர் மின் - அனல் மின் கொள்கையிலிருந்தும் ஒரு விலகலைக் காட்டுவதாக மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

(Srilanka News)



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்