யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவு கொக்குவில் கிழக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கு நுழைந்த சுமார் 15 பேர் கொண்ட குழுவினர் வீடு மற்றும் சொத்துக்களைத் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.
இன்று அதிகாலை சுமார் 02.30 மணியளவில், குறித்த குழுவினர் சென்று கற்கள், இரும்பு கம்பிகள் மற்றும் கூரிய ஆயுதங்களால் வீடு மற்றும் சொத்துக்களைத் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த மூவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அத்துடன் வீடு மற்றும் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் அதிகாலை 03.45 மணிக்கு இது தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கு கோப்பாய் பொலிஸ் நிலையத்தால் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.