பாகிஸ்தானில் இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தகவலை, அந்த நாட்டின் புலனாய்வுத்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பைசலாபாத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மோசடி அழைப்பு மையத்தில் பணியாற்றிய நிலையிலேயே இந்த இரண்டு இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 78 பாகிஸ்தானியர்கள், 48 சீனர்கள், 8 நைஜீரியர்கள், 4 பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள், ஆறு பங்களாதேஸ் நாட்டவர்கள், இரண்டு மியான்மர் நாட்டவர்கள், ஒரு சிம்பாப்வே நாட்டவர் மற்றும் இரு இலங்கையர்கள் அடங்குகின்றனர்.
இந்த மோசடி அழைப்பு மையத்தில், அதிக வருமானம் தரும் முதலீட்டு வாய்ப்புகள் என்றுக் கூறி, பெரும் தொகை மோசடி செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.



