சாதாரண தர பரீட்சை பெறுபேறுக்காக காத்திருந்த மாணவன் சடலமாக மீட்பு!!

  

Tamil lk News

ஹட்டன் சிங்கமலை குளத்தில் தவறி விழுந்த 17 வயது மாணவன் கடற்படை சுழியோடிகளின் உதவியுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


நேற்று (08) மாலை நண்பர்களுடன் சிங்கமலை நீர்த்தேக்கத்தில் புகைப்படம் பிடிக்க சென்ற போதே தவறி விழுந்து காணாமல் போயுள்ளார்.



கொட்டகலை கேம்பிரிஜ் கல்லூரியில் சாதாரண தரம் கற்று பரீட்சை பெறுபேறுக்காக காத்திருந்த நாவலப்பிட்டி தொலஸ்பாகை பிரதேசத்தை சேர்ந்த பாண்டியன் தமிழ்மாறன் என்ற மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


குறித்த சிறுவன், ஆறு நண்பர்களுடன் நேற்று மாலை புகைப்படங்கள் எடுத்துவிட்டு, அட்டையின் கடியால் ரத்தம் கசிந்ததை கண்டு கால்கலை கழுவ முற்பட்டபோது இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது



பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் தேடுதல் பணியினை மேற்கொண்ட போதும் தேடமுடியாத நிலையில் இராணுவம் மற்றும் இரங்கன கடற்படை முகாம் சுழியோடிகளின் உதவியுடன் இன்று தேடிய நிலையில் பிற்பகல் சடலம் 2 மணியளவில் சடலமாக மீட்டனர்.

Tamil lk News


உயிரிழந்த மாணவனின் பெற்றோர் வெளிநாட்டில் பணி புரிவதுடன் ஹட்டன் பிரதேசத்தில் வாடகை வீடொன்றில் தக்கியிருந்து கல்விகற்று வருவதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்