குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் பாலம் இடிந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என அநநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மத்திய குஜராத்தையும் சௌராஷ்டிராவையும் இணைக்கும் கம்பீரா பாலம் இன்று அதிகாலை திடீரென உடைந்து விழுந்ததில், அதில் சென்று கொண்டிருந்த குறைந்தது நான்கு வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றன்.
மீட்பு பணி
இந்த சம்பவத்தையறிந்து, உள்ளூர் அதிகாரிகள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தொடங்கியுள்ளனர்.
இந்த விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.அத்தோடு ஆற்றிலிருந்து இதுவரை நான்கு பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

சாதாரண தர பரீட்சை பெறுபேறுக்காக காத்திருந்த மாணவன் சடலமாக மீட்பு!!
தற்போது, அந்த வழியாக வரும் வாகனங்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.