அமெரிக்க தொழிலாளர் தின கொண்டாட்டத்தின்போது, சிக்காகோவில் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதோடு 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், இல்லினாய்ஸ் மாகாணத்தின் சிக்காகோ நகரின் பல்வேறு பகுதிகளில், 72 மணி நேரத்தில் 32 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.