முதல் பெண் மாவீரர் மாலதியின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு...!

 

Tamil lk News

 

கிளிநொச்சியில் இரு வேறு வேறு பகுதிகளில் இரண்டாம் லெப்டினல் முதல் பெண் மாவீரர் மாலதியின்38 ஆண்டு நினைவேந்தன் நிகழ்வு சிறப்பு அனுஷ்டிக்கப்பட்டது.


தர்மபுரம் பகுதியிலும் கரைச்சுப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சண்முகம் ஜீவராசா தலைமையில் தனியார் மண்டபம் ஒன்றில் மலர் வணக்கம் செலுத்தப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றது.



 அதேபோன்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கிளிநொச்சி மாவட்டக்கிளையின் ஏற்பாட்டில் முதற்பெண் மாவீரர் 02ம் லெப் மாலதியின் 38வது நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சி பாரதிபுரம்பகுதியில் இன்று(10), வெள்ளிக்கிழமை மாலை, 3.00மணியளவில் நடைபெற்றது.



 இந்தநிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேலுமாலிதன் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்கள் என பலருங்கள் வந்து கொண்டு தமது அஞ்சலியை செலுத்தினர்.


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்