நாடு முழுவதும் விசேட சுற்றிவளைப்பு - 5,763 பேர் கைது

 

Tamil lk News

நாடு முழுவதும் நேற்று (10) இடம்பெற்ற விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது 5,763 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.




இதேவேளை, இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்பில் 24 பேரும், சந்தேகத்தின் பேரில் 696 பேரும், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 329 பேரும், திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 174 பேரும், மதுபோதையில் வாகனங்களை செலுத்திய 27 சாரதிகளும், கவனக்குறைவாக வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 24 சாரதிகளும், ஏனைய போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 4,489 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.




பொலிஸ் அதிகாரிகள், இராணுவ வீரர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்