திருகோணமலையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி!!

  

Tamil lk News

திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 98ம் கட்டை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த விபத்து இன்று (08) மாலை இடம்பெற்றுள்ளது. 




இவ் விபத்தில் மூதூரை சேர்ந்த 55 வயதுடைய குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.




பேருந்தில் இருந்து இறங்கி மஞ்சள் கடவையை கடக்கும் போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.


மோட்டார் சைக்கிளில் வந்த நபர் காயங்களுக்குள்ளாகி, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.


உயிரிழந்தவரின் சடலம் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்