நிவாரணம் வழங்கச் சென்ற கார் விபத்து!

  

Tamil lk News

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிவிட்டு திரும்பிய கார் ஒன்று நானுஓயா - சாமர்செட் பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. 



விபத்தில் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர். 



நேற்று (04) மாலை 6.30 மணியளவிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. 



காரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த நிலையிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்