பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் விபத்து!

  

Tamil lk news

பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் இன்று (06) அதிகாலை 2.30 மணியளவில் ஏற்பட்ட பாரிய சாலை விபத்தில் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


வீதியின் ஓரத்தில் நிறுத்தி இருந்த இரண்டு மோட்டார் வாகனங்கள் மீது, வெள்ளவத்தை திசையிலிருந்து கொழும்பு நோக்கி அதிவேகமாக வந்த லொரி ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மேலும், மோட்டார் வாகனங்களுடன் மோதிய பின்னர், அந்த லொரி ரயில் வீதியை நோக்கிச் சென்று, இறுதியாக ரயில் தண்டவாளத்தில் நின்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 



இவ்விபத்து  தொடர்பாக பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்