கல்வி அறிவு உங்களை உலகில் அடையாளப்படுத்தும்

 கல்வி அறிவு உங்களை உலகில் அடையாளப் படுத்தும்



அரசனுக்கு நாடு மட்டும்தான் சொந்தம் ஆனால் கற்றவனுக்கு இந்த உலகமே சொந்தம் என்ற வாக்கியத்துடன் கல்வி அறிவு என்பது எவ்வளவு முக்கியமானது கல்வி கற்பதன் மூலம் நீங்கள் எவ்வாறான சிறப்புகளை அடைவீர்கள் என்பதை பற்றி இந்த கட்டுரையில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த கட்டுரையை தொடர்கின்றேன்.

மனித சமுதாயத்தில் கல்வி என்பது மிகவும் முக்கியமானது ஒன்றாகும். ஒருவர் கற்கவில்லை என்றால் சமுதாயத்தில் அவருக்கான மதிப்பு குறைந்த அளவிலேயே இருக்கும் சமுதாயத்தில் ஏற்படும் நன்மைகள் தீமைகள் அனைத்திற்கும் கல்வியறிவு இல்லாதவர்களிடம் எந்தவிதமான அறிவுரைகளையும் கேட்பது குறைவாகத்தான் இருக்கும். அதேபோல் கல்வியில் சிறந்து விளங்கிய ஒருவர் சமுதாயத்தில் அவருக்கு இருக்கும் மதிப்பானது அளவுக்கு அதிகமாக இருக்கும் அவரின் அறிவுரைகள் அனைத்தையும் செவி எடுக்கும் அளவுக்கு அவர் கற்றுக்கொண்ட கல்வியே அவருக்கு மதிப்பையும் மரியாதையும் அள்ளி வழங்குகின்றது என்பதை கல்வியை கற்றவர்கள் மூலமாக நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

கல்வி அறிவு என்பது இந்த மனித இனத்திற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷமாகும் இந்த பொக்கிஷத்தை சிறு பிராயத்தில் இருந்தே கற்றுக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் இந்த உலகில் நீங்கள் எதிர்கொண்டு வாழ்வது ஒரு கடினமான விடயமாக மாறி விடுவதற்கான அதிகமான வாய்ப்புகளும் இருக்கும் என்பதை நீங்கள் முதலில் தெரிந்துகொள்ளுங்கள். சிலர் நினைப்பார்கள் செல்வம் இருந்தால் கல்வி அறிவு எதற்கு வேண்டும்.  செல்வம் அதிகமாக இருந்தால் இந்த உலகில் எதையும் செய்து முடிக்கலாம் என்ற எண்ணத்தில் இருப்பவர்களும் அதிகமாக இந்த உலகில் இருக்கிறார்கள். ஆனால் செல்வம் என்பது அவருடைய வாழ்வில் எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ள முடியாது. இதற்கு உதாரணமாக நான் கண்ட ஒரு அனுபவத்தை உங்களிடம் பகிர்கிறேன்.

நான் பணம் போடுவதற்காக வங்கிக்கு சென்றிருந்தபோது வங்கியில் பணத்தை வைப்பு செய்வதற்கான பற்றுச் சீட்டினை நிரப்பிக் கொண்டிருந்தேன் அப்போது வங்கிக்குள் வந்த மிகப்பெரிய செல்வந்தராக இருந்தார் அவர் ஆம் அவரின் கைகளில் எல்லா விரல்களிலும் விலை உயர்ந்த மோதிரங்கள் காணப்பட்டது. அவரின் கழுத்தில் மாத்திரம் கிட்டத்தட்ட 20 பவுன் கொண்ட தங்கச் சங்கிலி தொங்கிக்கொண்டிருந்தது. அப்போது அவர் என்னருகில் வந்து பணம் போடும் பற்றுச் சீட்டின்னை ஒன்றை எடுத்துக்கொண்டு அவரிடமிருந்த வங்கி சேமிப்பு புத்தகத்துடன் என்னிடம் வந்து இந்த பற்று சீட்டினை சற்று திருப்பி தாருங்கள் என்று கேட்டார் அவரிடம் இருந்த பணமும் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நான் சற்று வியப்படைந்து கொண்டு அவரின் பற்றி சீட்டையும் நிரப்பிக் கொடுத்தேன். இதை ஏன் உங்களிடம் சொல்கிறேன் என்றாள் அவரிடம் அதிகமாக செல்வம் இருந்தபோதும் அவரிடம் கல்வி அறிவு இல்லை என்பதால் அவருடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஒரு கல்வி அறிவு உள்ளவரை நாடுகிறார் என்றால் அந்த இடத்திலேயே அவர் வைத்திருந்த செல்வங்கள் அனைத்தும் தோற்றுப் போய்விட்டது என்பதாகும் இதிலிருந்து தெரிந்து கொள்ளுங்கள் கல்வி என்பது இவ்வளவு உயர்ந்த நிலையில் இருக்கிறது என்பதையும் கல்வியின் மகத்துவத்தையும் இதன் மூலமாக செல்வந்தர்களும் கல்விக்கு அடிமை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

மாணவர்களாகிய உங்களுக்கு கல்வியே மிகவும் இலகுவாக கற்பதற்கான அதிகமான வாய்ப்புகள் உங்களை சுற்றியே இருக்கும் போது அதை நீங்கள் சரியாக பயன்படுத்த வேண்டும் சிலருக்கு குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் காரணமாக கல்வியையும் சீராக கற்றுக் கொள்ள முடியாமல் இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருந்தாலும் அந்த சூழ்நிலையில் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கல்வியில் சிறந்து விளங்கியவர்கள் இந்த உலகில் அதிகமாக இருக்கிறார்கள். குடும்பத்தில் இருக்கும் சூழ்நிலை உங்களைத் தொடர்ந்து துன்பத்தை தந்து கொண்டு இருந்தாலும். அந்த துன்பத்தையும் ஒரு நாள் உங்களை தூரத்தில் இருந்து எட்டி பார்க்கும் அளவுக்கு மாற்றி அமைக்கும் வல்லமை கொண்டது கல்வி என்பதால் கல்வியை சிறப்பாக கற்று உங்கள் வாழ்வில் ஒரு சிறப்பான மாற்றத்தை உருவாக்குவதற்கான திட்டத்தை இன்றே வகுத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் பாடசாலையில் படிக்கும் போது உங்களிடம் இருக்கும் சக மாணவர்கள் உங்களை விட அதிகமான பெறுபேறுகளை எடுத்திருப்பார்கள் இதைப்பற்றி என்றாவது நீங்கள் சிந்தித்தது உண்டா அதாவது நானும் அவர் படிக்கும் பாடசாலையில் தான் படிக்கின்றேன். அதே வகுப்பில் தான் படிக்கின்றேன் அதே ஆசிரியர்களிடம் தான் கற்றுக் கொள்கின்றேன் ஆனால் என்னால் மாத்திரம் ஏன் அந்த மாணவர்கள் போல் அதிகமான பெறுபேறுகளை எடுக்க முடியாமல் உள்ளது. இது எனது தவறா அல்லது ஆசிரியரின் தவறா என்பதை பற்றி நீங்கள் சற்று யோசித்துப் பார்த்துள்ளீர்களா அப்படி யோசிக்கும் தன்மை உள்ளவரா நீங்கள் இருந்தால் நான் சொல்லும்  வழிமுறைகளை பயன்படுத்தி பாருங்கள் நிச்சயம் நீங்கள் ஒரு நல்ல பெறுபேறுகளை எடுக்கும் மாணவராக மாறுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உண்டாகும்.

நீங்கள் கல்வியில் சிறந்திட முதலில் உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். அதாவது என்னால் எதையும் செய்ய முடியும் எதையும் இலகுவாக கற்றுக்கொள்ள முடியும் அதற்கான திறமை என்னிடம் இருக்கிறது. என்ற நம்பிக்கை உங்கள் மீது எப்போதும் இருக்கவேண்டும். அதாவது ஒரு முயற்சி என்பது இல்லை என்றால் எதிலும் வெற்றி என்பது இலகுவில் கிடைப்பதில்லை ஆகையால் உங்கள் பாடசாலையில் படிக்கும் சக மாணவர்கள் அதிகமாக பெறுபேறுகளை எடுக்கிறார்கள் என்றால் அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் என்பதை நீங்கள் கணக்குப் போடுங்கள் அதாவது நான் ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் படிக்கின்றேன் படித்ததை எவ்வாறு நான் தெளிவாக அறிந்து கொண்டேன் என்பதைப்பற்றி உங்களையே நீங்கள் ஆய்வு செய்யுங்கள். இப்படி செய்யும்போது நீங்கள் கல்வியில் எவ்வளவு பின்னடைவு இருக்கிறீர்கள் அல்லது எவ்வளவு முன்னேற்ற நிலையில் இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

கல்வி என்பது மிகவும் கடினமானது கற்பது மிகவும் சிரமமாக இருக்கிறது என்றெல்லாம் நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பீர்கள் அது தான் மிக தவறான விடயம் கல்வி என்பது ஒருபோதும் கடினமானது அல்ல அதை கடினம் ஆக்குவது நீங்கள்தான். அதாவது ஒரு விடயம் புரியவில்லை என்றால் அய்யோ இது எனக்குப் புரியவில்லை இது மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று உங்கள் மனதுக்குள் கல்வியை ஒரு துன்பமாக நினைப்பதற்கு தொடங்குவீர்கள் நாளடைவில் அதுவே உங்களுக்கு ஒருவிதமான பயத்தை உருவாக்கி கல்வியை வெறுக்கும் நிலைக்கு தள்ளிவிடும். இதிலிருந்து தெரிந்து கொள்ளுங்கள் கல்வி என்பது அதே இடத்தில் தான் இருக்கிறது நீங்கள்தான் கல்வியை விட்டு வெகு தொலைவில் போய்க்கொண்டு இருக்கிறீர்கள் நீங்கள் தொலைவில் செல்லச்செல்ல கல்வியும் உங்கள் மனதிலிருந்து அகன்று ஓடிவிடும் ஆகையால் கல்வி என்பது கடினமாக நினைத்துக் கொள்ளாதீர்கள் அப்படி கடினமான நிலை ஏற்பட்டால் இதை ஏன் கடினமாகிறது. இதற்கு இலகுவான வழி என்னவாக இருக்கும். இதை நான் இலகுவாக கற்றுக் கொள்ள இவ்வாறான முயற்சிகள் எடுக்க வேண்டும். என்பதை பற்றி சிந்தித்து பாருங்கள் அப்போது உங்களுக்கு கல்வியை கண்டு பயம் என்பதே வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்த நிலையில் காணப்படும் என்பதே கூறிக்கொண்டு இந்தக் கட்டுரையின் நிறைவு பகுதியை வந்த அடைகின்றேன் கல்வியறிவு தான் உங்களை உலகில் உங்களை அடையாளப்படுத்தும் என்பதை கூறிக்கொண்டு தொடர்ந்து எங்கள் இணையதளத்துடன் இணைந்திருங்கள் அறிவின் தேடல் மூலமாக பல தகவல்களை நீங்கள் எங்கள் இணையத்தளத்தின் ஊடாக அறியக்கூடியதாக இருக்கும் என்பதை அரிய தருவதோடு கல்வியை திறன்பட கற்று உலகை வென்று விடுங்கள்.

இதைப்போன்ற அறிவாற்றல் கொண்ட தகவல்கள் அனைத்தையும் நீங்கள் அறிந்து கொள்ளும் மூலம் உங்கள் அறிவாற்றலை மேலும் வளர்த்துக் கொள்ளுங்கள் தொடர்ந்து எங்கள் இணையதளத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள் மீண்டும் ஒரு பதிவில் உங்களை சந்திக்கின்றேன் இதுவரைக்கும் பொறுமையாக இந்தக் கட்டுரையை பார்த்த உங்களுக்கு எங்கள் இணையதளத்தில் நன்றிகள்.



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்