முயற்சி வெற்றியளிக்கும்

 முயற்சி எடுத்தால் உங்கள் திறமையை உலகுக்கு  வெளிப்படுத்த முடியும்



மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் இந்த உலகில் நான் ஒரு சிறந்தவனாக மாற வேண்டும். உலகம் என்னை பாராட்ட வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். ஆனால் அந்த ஆசைகள் அனைத்தையும் தனக்குள்ளே புதைத்து வைத்துக்கொண்டு உலகுக்கு வெளிக்காட்டாமல் இருப்பார்கள். இதற்கு என்ன காரணம் ஏன் உங்களால் உங்கள் திறமையை உலகுக்கு வெளிப்படுத்த முடியாமல் இருக்கிறது. என்பதை பற்றி இந்த பதிவில் மிகத் தெளிவாகப் பார்க்க உள்ளோம். நிச்சயம் இந்த பதிவு உங்களை உற்சாகப்படுத்துவது உடன் உங்களுக்குள் இருக்கும் திறமைகளை உலகுக்கு பயன்படுத்தும் வகையில் மாற்றும் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவை தொடர்கின்றேன்.

உங்கள் திறமைக்கு யார் முதல் எதிரி

உங்களுக்குள் இருக்கும் திறமையை வெளியே காட்ட விடாமல் தடுப்பது வேற யாரும் அல்ல அந்த எதிரி நீங்கள் தான். நீங்கள் நினைக்கலாம் என் திறமைக்கு நான் எதிரியா என்று ஏன் இதை சொல்கிறேன் என்றால் உங்கள் திறமை மீது முதலில் உங்களுக்கும் நம்பிக்கை வரவேண்டும். என்னால் இதை நிச்சயம் செய்து முடிக்க முடியும். என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உங்களுக்குள் இருந்தால் மாத்திரம் தான். உங்களிடம் இருக்கும் திறமைகள் முழுமையாக வெற்றி அடையும். உங்கள் மீது நம்பிக்கை இல்லாத போது நீங்கள் எப்படி கஷ்டப்பட்டு போதிலும் அதில் பயன் கிடைக்காது.  உங்களுக்குள் இருக்கும் திறமையால் உருவாகும் படைப்புக்கள் நிச்சயம் வெற்றி அளிக்கும் என்ற நம்பிக்கையுடன் தான் செய்வீர்கள். ஆனால் அதில் ஒரு சிறு தவறு ஏற்பட்டு நீங்கள் தோல்வியை அடைந்துவிட்டால் உங்கள் மீது நீங்களே வைத்திருந்த நம்பிக்கை உடைந்துவிடும் பின்னர் எடுத்து வைக்கும் அடுத்த முயற்சிகள் அனைத்தும் உங்கள் மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லாத செயலாக தான் செயல்படுவீர்கள். </!doctype>

நீங்கள் எடுக்கும் முயற்சியில் தோல்வியடைந்தால் அதிலிருந்து மீள்வது எப்படி

நீங்கள் இந்த உலகுக்கு ஏதாவது ஒரு விடயத்தை செய்து காட்ட வேண்டும் என்ற ஆர்வத்துடன் ஏதாவது ஒரு துறையில் ஒன்றை எடுத்து செய்வீர்கள் உதாரணத்திற்கு கலைத்துறை, அறிவியல் துறை, புதிய கண்டுபிடிப்புகள். விண்வெளி ஆய்வுகள் என பல விடயங்களை நீங்கள் முயற்சி செய்து முழு நம்பிக்கையுடன் என்னால் இது செய்துகாட்ட முடியும் என்ற ஒரே முயற்சியில் செய்து கொண்டிருக்கும் போது இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் அடைந்தாள் ஒருபோதும் பின் வாங்கி விடாதீர்கள் தோல்வி என்பது நிரந்தரமல்ல என்பதை நீங்கள் மனதில் உறுதியாக நினைத்துக் கொள்ள வேண்டும்.  சரி ஒரு விடயத்தில் தோல்வி அடைந்து விட்டீர்கள் என்றால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் நீங்கள் எடுத்த முயற்சி எதனால் தோல்வியடைந்தது எந்த விடயத்தை நான் சரியாக செய்யவில்லை எங்கு பிழை விட்டிருப்பேன் என்பதை நன்கு ஆராயுங்கள் ஒன்றுக்கு பலமுறை ஆராய்ந்து பாருங்கள். நிச்சயம் நீங்கள் விட்ட தவறுகள் எதுவென்று கண்டுபிடித்து விடுவீர்கள்.

கண்டுபிடித்த தவறுகளை எப்படி சீர் செய்வது இன்னும் அதற்கு அதிகமான ஆற்றலைக் கொடுத்து மீண்டும் உங்கள் படைப்புக்களை சரியாக அமைப்பது என்பதை பற்றி ஆராயுங்கள். இப்படி செய்யும்போது நிச்சயம் உங்கள் படைப்புக்கள் அனைத்தும் உலகம் ஏற்றுக்கொள்ளும் ஏனென்றால் நீங்கள் நம்பிக்கையை இழக்காமல் விட்ட தவறுகளை இனம்கண்டு அந்த தவறுகளுக்கும் புத்துணர்ச்சி கொடுத்து மீண்டும் உங்கள் படைப்புக்களை உலகுக்கு காட்ட முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்குள் இருக்கும்போது உங்கள் படைப்பு நிச்சயமாக தோல்வி அடையாது.

 படைப்பாளி சமுதாயத்தில் முகம்கொடுக்கும் பிரச்சினைகள்

இந்த மனித சமுதாயம் ஒருபோதும் ஒருவருடைய திறமையை உடனடியாக ஏற்றுக் கொள்ளாது. ஆம் இப்போது நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் நவீன தொழில்நுட்பங்கள் அனைத்தையும் முன்னொரு காலத்தில் ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பின் மூலமாக பரிமாணம் அடைந்து இப்போது நவீன தொழில்நுட்பங்கள் ஆக உருவெடுத்து உள்ளது. ஆனால் இந்த நவீன தொழில்நுட்பங்களுக்கு ஆணிவேராக இருந்த கண்டுபிடிப்பாளர்கள் எவ்வளவு அவமானங்கள் எவ்வளவு தோல்விகள் அனைத்தையும் பார்த்துதான் அவர்களின் கண்டுபிடிப்பு இந்த உலகம் ஏற்று அவர்களை இன்றும் பாராட்டிக் கொண்டே இருக்கிறது.

இப்படியான பிரச்சனைகளை நீங்கள் சந்தித்து இருப்பீர்கள் சற்று யோசித்துப் பாருங்கள் நீங்கள் ஏதாவது ஒரு படைப்பை சமுதாயத்திற்கு அல்லது உங்கள் நண்பர்கள் அல்லது தெரிந்தவர்களுக்கு வெளிப்படுத்துவீர்கள் அப்போது அவர்கள் சொல்வார்கள் இந்த வேலை உனக்கு எதற்கு உன்னால் இது செய்ய முடியுமா இதை அனைத்தையும் கைவிட்டு உன் வேலையை பார் என்று சொல்வார்கள். இப்படியான பிரச்சனைகளை நீங்கள் எதிர்நோக்கும் போது நான் இப்போது சொல்லும் விடயத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் அது என்னவென்றால் உங்களிடம் இருக்கும் படைப்பை நீங்கள் அவர்களுக்கு வெளிப்படுத்தும்போது. உங்கள் திறமையை புறக்கணிக்கிறார் என்றால் நிச்சயம் உங்கள் திறமை மிகச் சிறந்ததாக தான் இருக்கும் ஏனென்றால் உங்கள் படைப்பை பார்த்து அவர் நிச்சயம் மனதிற்குள் வியந்து இருப்பார் ஆனால் அவர் இது சிறந்தது என்று மனம் திறந்து சொல்ல அவரால் முடியாமல் இருக்கும் ஏனென்றால் நீங்கள் திறமைசாலி ஆகிவிடுவீர்கள் அதனால் உலகில் நீங்கள் பெரிய பாராட்டுகளை பெற்று விடுவீர்கள் என்பதால் உங்கள் திறமையை புறக்கணித்து உங்கள் மனதை குழப்பி விடுவார்கள்.

நான் சொன்னது போல இனி உங்களுக்கு இவ்வாறான நிகழ்வுகள் ஏற்பட்டால் உடனே மனம் உடையாமல் அவர் கூறிய வார்த்தைகளை ஏதாவது பயன்தரும் வகையில் இருக்கிறதா என்று யோசியுங்கள். அதில் எந்தவிதமான பயனும் இல்லை என்றால் அவரின் வார்த்தைகள் அனைத்தையும் குப்பைக் கூடைக்குள் போட்டு விடுங்கள் அதாவது உங்கள் மனதிலிருந்து அழித்துவிடுங்கள்.

வெற்றிக்கு திட்டம் அவசியம்

நீங்கள் எந்த துறையை செய்ய எடுத்தாலும் முதலில் அதற்கான திட்டத்தை சரியாக வைத்துக் கொள்ளுங்கள். சரியான திட்டம் மாத்திரமில்லாமல் விட்டாள் நீங்கள் எடுக்கும் எந்த முயற்சியும் தோல்வியைத்தான் தழுவும். சரியாக திட்டத்தை வகுத்து அதற்கேற்றபடி உங்கள் படைப்புகளை மேற்கொள்ளும்போது உங்களுக்கு ஒருபோதும் பின்னடைவுகள் ஏற்படாமல் சரியாக செயல்படுத்த முடியும்.

நீங்கள் ஒரு விடயத்தை செய்யும் போது இது எனக்கு சரியாக வருமா இது நிச்சயம் எனக்கு அவசியமானதா இதனால் எனக்கு பயன் தருமா என்பதை பலமுறை யோசித்து பயன்படுத்த தொடங்குங்கள் ஏனென்றால் தேவையற்ற விடயங்களையும் தேவையற்ற பொருட்களையும் சேகரிப்பதன் மூலமாக அது உங்கள் மன உளைச்சலையும் வீண் செலவுகளையும் அதிகரிக்கும் இதனால் உங்கள் செயல்திறன் பின் அடைவதற்கான வாய்ப்புகள் ஆகவும் இது அமைந்து விடும்.

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் இந்த உலகம் சொந்தம் அதே போன்று உங்கள் படைப்புகளும் இந்த உலகுக்கு தான் சொந்தம் என்பதை மனதில் நினைத்துக்கொண்டு உங்கள் திறமையின் மீது முழு நம்பிக்கையுடன் உங்கள் படைப்புக்களை செய்து பாருங்கள். நிச்சயம் நீங்கள் ஒருநாள் மாபெரும் வெற்றியாளர் ஆகி இந்த உலகம் உங்களை பாராட்டும் என்று கூறிக்கொண்டு இந்த பதிவினை நிறைவு பகுதியை வந்து அடைகின்றோம் இதேபோன்று தகவல்கள் அனைத்தையும் எங்கள் இணையத்தளத்தின் ஊடாக நீங்கள் அறிந்துகொள்ள முடியும் ஆகையால் எங்கள் இணையதளத்துடன் தொடர்ந்து இணைந்து கொண்டு நல்ல தகவல்களை அறிந்து கொள்ள முடியும் என்பதை உங்களுக்கு அறியத்தருகின்றோம்.

நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு நிச்சயமாக பயன் தந்திருக்கும் என்று நம்பிக்கையுடன் உங்கள் கருத்துக்களையும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம் உங்கள் ஆதரவுக்கு எங்கள் இணையதளத்தில் நன்றிகள்.


உலகின் அனைத்து நிகழ்வுகளையும் உடனே அறிந்து கொள்வதற்கு எங்களுடைய telegram channel உடன் இணைந்து கொண்டு அறிந்து கொள்ளுங்கள்

Telegram
Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்