தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் மேலாக தற்போது விரிந்தடைந்த தாழமுக்கம் இன்னும் 48 மணித்தியாலங்களில் இலங்கையை கடக்க கூடிய சாத்தியம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல்
இன்றைய தினத்திற்கான வானிலை அறிவிப்பில் மேற்கொண்ட விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தென்மேற்கு வங்காள வெரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாளமுக்கம் நேற்று(23-12-2022) காலையில் திருகோணமலை வடகிழக்காக 370 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது.
பலத்த காற்றும் மழையும் அதிகரிக்கும்
தொடர்ந்து வரும் 48 மணித்தியாலங்களில் இலங்கையை கடக்க கூடிய சாத்தியம் காணப்படுவதால் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையும் காற்றும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பொதுமக்கள் அனைவரும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்வதற்காக முன்னெச்சரிக்கையாக செயல்படுமாறு பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.



