வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல்:அச்சுவேலி

 


யாழ்ப்பாணம் அச்சுவேலி தென்மூலைப் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம்

தென்மூலை கைத்தொழில் பேட்டை, பிரதான வீதியில் அமைந்துள்ள மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் வாள்களுடன் வந்து தாக்குதல்களை மேற்கொள்ளப்பட்டதாக சம்பவத்தில் தெரியவந்துள்ளது.

இதன் போது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் அனைத்தையும் உடைத்து வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடியையும் அடித்து உடைத்து சொத்துக்களை சேதமாக்கி சென்றுள்ளார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்