யாழ்ப்பாணத்தில் பெற்றோர்களின் மூடநம்பிக்கையால் 8 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்!


யாழ்ப்பாணத்தில் நாவாந்துறை பகுதியில் குழந்தை ஒன்று அதிகமான வயிற்றோட்டத்தில் பாதிக்கப்பட்டிருந்தது இந்த வயிற்றோட்டத்தை நிறுத்துவதற்காக பெற்றோர்கள் ஆலயத்தில் நூல்கட்டி குழந்தைக்கு சுகமாகிவிடும் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்த வேலை குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை அதிகமான   வயிற்றோட்டத்தில்  பாதிக்கப்பட்டிருந்த குழந்தையை அருகிலுள்ள ஆலயம் ஒன்றுக்கு அழைத்துச் சென்று பூஜைகள் நடத்தி நூல் கட்டியுள்ளார்கள்.

இந்த நிலையில் குழந்தையின் வயிற்றேட்டம் தொடர்ந்து நிக்காத காரணத்தால் மறுநாள் வெள்ளிக்கிழமை மாலை  யாழ் போதனை வைத்தியசாலைக்கு அனுமதித்த வேலை  குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மரண விசாரணையில் குழந்தைக்கு அதிகமான நீரிழப்பு ஏற்பட்டதால்தான் குழந்தை உயிர் இழக்க நேரிட்டது என்று அறிக்கையிடப்பட்டது.

இப்போதைய காலகட்டத்தில்  நவீன மருத்துவத்துறை  காணப்பட்ட நிலையிலும் இவ்வாறான மூட நம்பிக்கையால் பரிதாபமாக குழந்தை இறந்தது பிரதேசத்தை மிகவும் சோகத்திற்கு உள்ளாக்கியது.


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்