திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் பயணித்த பேருந்து கிளிநொச்சியில் பயங்கர விபத்து!



திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று கிளிநொச்சி பளையில் பாரிய விபத்துக்கு உள்ளாகியது.

இந்த விபத்தின் போது பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்த சம்பவத்தில் பேருந்தில் பயணித்த பயணிகள் பலத்த காயங்களுக்கு உள்ளாகியதால் அவர்களை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த விபத்து சம்பவம் 21-12-2022 மாலை 6.15 அளவில் இடம் பெற்றுள்ளது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்