பஸ் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக இன்று காலை பஸ் வீதியை விட்டு விலகி மத்தேகொட பகுதியில் உள்ள வீட்டின் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
பஸ்சுக்குள் டிரைவர் இறந்தார்
இந்த பஸ் இன்று(20-12-2022) அதிகாலை 5 மணியளவில் முதல் பயணத்தை ஆரம்பிப்பதற்காக கொட்டாவ பஸ் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது, மத்தேகொட பிரதேசத்தில் சாரதிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
அப்போது, தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல், சாலையை விட்டு விலகி, அருகில் இருந்த சுவரை உடைத்து, வீட்டின் அருகே நின்றதாக போலீஸார் தெரிவித்தனர்.
கஹதுடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
Tags:
srilanka



