யாழ்-காரைநகர் பகுதியில் இராணுவ வீரர் தொழிலாளியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய சம்பவம்!


காரைநகர் சாம்பல் ஓடை கடற்கரை பகுதியில் கருவாடை உலர வைத்துக் கொண்டிருந்த தொழிலாளி ஒருவரின் கழுத்தில் கத்தியை வைத்து ராணுவ வீரர் ஒருவர் மிரட்டிவுள்ளதா தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சாம்பல் ஓடை கடற்கரை பகுதியில் நேற்றைய தினம் கருவாட்டை உலர வைத்துக் கொண்டிருந்த தொழிலாளி ஒருவரை அப்பகுதியில் வந்து கொண்டிருந்த இராணுவ வீரர் ஒருவர் தொழிலாளியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி விட்டு சென்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

பாதிக்கப்பட்ட தொழிலாளி, காரைநகர் கடற்தொழிலாளர் சங்கத்திற்கும், அப்பகுதியின் கிராம சேவையாளருக்கும் இந்த சம்பவம் தொடர்பாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து ஊர்க்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அத்தோடு இந்த சம்பவம் தொடர்பாக தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் கடற் தொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்